சேர்க்கை

மகிழ்வோடு மலரும் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதல் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது. தனித்தேர்வுகள் ஏதுமின்றி முன்கற்றலைத் தானறியக் கனிவாகக் கலந்துரையாடல் நடைபெறும். தேவைப்படின் மொழியாற்றல் நிலையறிய வழிகாட்டும் தாள் வழங்கப்படும். அது கற்று உணர்ந்ததைக் காட்சிப்படுத்தவும், கற்றுணர வேண்டியதை ஆட்சிப்படுத்தவும் வழிகாட்டும்.

மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் சூலைத் திங்கள் 31ஆம் நாளில் நிறைவடைந்து இருக்கவேண்டிய அகவை கீழ்க்கண்ட அகவைப் பட்டியல்படி அமைதல் வேண்டும்.

வகுப்பு               6 7 8 9 10
அகவை               10+ 11+ 12+ 13+ 14+

தேவைப்படும் ஆவணங்கள் :

  • பிறப்புச்சான்று நகல் – 1
  • வருமானச்சான்று நகல்  – 1
  • ஆதார் அட்டை நகல்    –  1
  • குடும்ப அட்டை நகல்    –  1
  • மார்பளவுப் புகைப்படம்   – 2 (கடவுச்சீட்டு அளவில்)
  • மாற்றுச் சான்றிதழ் – உண்மைப் படி
  • கல்வித் தகவல் மேலாண்மை முறை எண் (EMIS)

மிகக் குறைந்த அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளியின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்கள் அறிய, பள்ளி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். 

 தலைமையாசிரியர் – 99433 71195